போதல் இருத்தல் எனநினையாய்ப புனிதர் சனனப் போரோடு சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும் காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே
போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச் சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- திருவருட் கொடை கொச்சகக் கலிப்பா