போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும் சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும் தூயர்கள் மனம்அது துளங்கித் தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ தனிஅருட் சோதியால் அந்த வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம் வழங்குவித் தருளுக விரைந்தே