போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல் புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச் சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய் கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள் குமரன் தந்தையே கொடியதீ வினையைத் தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே
போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார் ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே