மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும் மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான் மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும் தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும் தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே