மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என் நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய் அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே