மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச் சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம் செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே