மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய் வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில் மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய் இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக் குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே