மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர் மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார் குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள் மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார் வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே
மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய் மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன் தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே