மணிக்குழை அடர்ந்து மதர்த்தவேற் கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன் கழலடிக் காக்கநாள் உளதோ குணிக்கரும் பொருளே குணப்பெருங்குன்றே குறிகுணங் கடந்ததோர் நெறியே எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும் எந்தையே தணிகைஎம் இறையே