மண்முதலாம் தத்துவத்தின் தன்மைபல கோடி வயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம் பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை() ஒருகோடி பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம் எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி () திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ சு பதிப்பு தண்மையுளே திண்மை - பி இரா பதிப்பு திண்மையுளே தண்மை - ச மு க பதிப்பு