மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா சிதமெ னும்பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார் யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க் குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே