மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன் பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன் பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன் பித்த நாயகன் அருள்திருப் பேறே பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா சலத்தின் மேவிய தற்பர ஒளியே