மனமான ஒருசிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடிச்சீர் மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம மடுவினிடை வீழ்ந்துசுழல்வான் சிவமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம் சிறுகுகையி னுட்புகுவான் செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும் செய்குன்றில் ஏறிவிழுவான் இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும்அந்தோ என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற் கேழையேன் என்செய்குவேன் தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே