மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம் தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே