மன்னி வளரு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான் முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றார் என்னி லிதுதா னையமென்றே னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார் அன்னி லோதி யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான் முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ