மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது வள்ளல்என் றெனக்குளே தெரிந்த அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா ஐயனே அன்பனே அரசே என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன் எட்டுணை எனினும்வே றிடத்தில் சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின் திருவுளம் தெரிந்தது தானே