மயிலின் மீதுவந் தருள்தரும் நின்றிரு வரவினுக் கெதிர்பார்க்கும் செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன் அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே
மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண்ணீ றுடையார் வெள்விடையார் பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார் குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே டீயஉம -------------------------------------------------------------------------------- புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்