மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே பரணம்உறு பேர்இருட்டுப் பெருநிலமும் தாண்டிப் பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான் என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை அரண்உறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான் அருட்பெருஞ்ஸோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- பேறடைவு எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்