மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத் தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப் பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக் கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே -------------------------------------------------------------------------------- ஆண்டருளிய அருமையை வியத்தல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்