மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர் பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன் குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ