மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி