மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள் மண்மீது படநடந்து வந்தருளி அடியேன் குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய் கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே