மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக் கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும் கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும் தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும் தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே