மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும் தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே