மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால் தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே திருவ ருட்குநான் சேயனும் ஆனேன் காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம் கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன் ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே
மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும் தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள் ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே