மாரனை எரித்தோன் மகிழ்தரு மகனை வாகையம் புயத்தனை வடிவேல் தீரனை அழியாச் சீரனை ஞானச் செல்வனை வல்வினை நெஞ்சச் சூரனைத் தடிந்த வீரனை அழியாச் சுகத்தனைத் தேன்துளி கடப்பந் தாரனைக் குகன்என் பேருடை யவனைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே