மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக் கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்உடையாய் சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட் பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ