மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும் ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில் கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே