முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும் மூடன் என்னநின் மொய்கழல் பதமேத் துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன் துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே