முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன் முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும் பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப் பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே