முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய் மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே