முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலா னானைக் களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக் காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம் விளையானைச் சிவபோகம் விளைவித் தானை வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும் இளையானை மூத்தானை மூப்பி லானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே