மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும் ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும் மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே
மூவிரு முடிபின் முடிந்ததோர்() முடிபே முடிபெலாம் கடந்ததோர் முதலே தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச் சத்தியத் தனிநடு நிலையே மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவெலாம் தருகின்ற வெளியே பூவியல் அளித்த புனிதசற் குருவே பொதுநடம் புரிகின்ற பொருளே () முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க, ஆ பா