மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசிலாக் களிப்பே ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும் அற்புதக் காட்சியே எனது பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப் பொதுநடம் புரிகின்ற பொருளே