மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவெலாம் காட்டிமெய் வேத நூல்வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும் நாயகக் கருணைநற் றாயே போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே பொதுநடம் புரிகின்ற பொருளே