யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி ஒளிஉருக் காட்டிய தலைவா ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன் என்றசொல் ஒலிஅடங் குதன்முன் ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய் அருட்பெருஞ் சோதிஎன் அரசே