யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள் இசைந்தபே ரின்பமே என்கோ சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச் சார்ந்தசற் குருமணி என்கோ மாகமும் புவியும் வாழ்வுற மணிமா மன்றிலே நடிக்கின்றோய் நினையே