வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும் மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும் தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில் பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப் பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே