வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம் வருந்திஉறு கணவெயிலால் மாழாந் தந்தோ தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத் தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே