வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச் சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே