வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன் முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம் என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய் நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே