வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய் மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே