வன்பில் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன் மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ அன்பிற் கிரங்கி விடமண்டோ ன் அருமை மகனே ஆரமுதே அகிலம் படைத்தோன் காத்தோன்றின் றிழித்தோன் ஏத்த அளித்தோனே துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே தணிகா சலமாந் தலைத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே