வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா வண்ணம்இன் றருள்செயாய் என்னில் துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்ந்தாள் துணைஅன்றித் துணைஒன்றும் காணேன் அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே திருச்சிற்றம்பலம் கூடல் விழைதல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்