வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல் வாதிபோல் வார்த்தைகள் வழங்கி அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன் இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை எனைவிடக் கொடியருக் கீந்தேன் நன்மையுற் றறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே