வருத்தந் தவரீ ரொற்றியுளீர் மனத்த காத முண்டென்றேன் நிருத்தந் தருநம் மடியாரை நினைக்கின் றோரைக் கண்டதுதன் றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ் சேருந் தூர மோடுமென்றார் அருத்தந் தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன் றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ