வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே