வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன் கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருதுவாயே அன்றிஅருள் உருவாய் வந்து தருவாயே தணிகா சலத்துள் உற்றமர்ந்த ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே
வருவாய் என்கண் மணிநீஎன் மனத்திற் குறித்த வண்ணமெலாம் தருவாய் தருணம் இதுவேமெய்த் தலைவா ஞான சபாபதியே உருவாய் சிறிது தாழ்க்கில்உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய் இருவாய் அலநின் திருவடிப்பாட் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே ஒருவா - ச மு க