வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான் மாலையோ காலையோ என்றாள் எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே ஏவல்செய் கின்றன என்றாள் தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள் துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள் சோர்விலாள் நான்பெற்ற சுதையே