வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய் மறலி வந்துனை வாஎன அழைக்கில் ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூமகள் கொழுநன் ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே
வாது பேசிய மனிதர் காள்ஒரு வார்த்தை கேண்மீன்கள் வந்துநும் போது போவதன் முன்ன ரேஅருட் பொதுவி லேநடம் போற்றுவீர் தீது பேசினீர் என்றி டாதுமைத் திருவு ளங்கொளும் காண்மினோ சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே